கர்நாடகா, கேரளாவில் மிக கனமழை பெய்யும்- இந்திய வானிலை மையம்
கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது
தொடர் மழையால் கேரள மாநிலம் வெள்ளக்காடாகியுள்ளது. நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 94-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் மாயமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கேரளா, கர்நாடகாவில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு அரபிக்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தமிழகத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் மாநிலங்களில் இன்று முதல் மழை படிப்படியாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.