பாகிஸ்தானின் 22-வது பிரதமராக பதவியேற்றார் இம்ரான் கான்
பாகிஸ்தானில் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை.
இந்த நிலையில் மற்ற கட்சிகளுடன் உதவியுடன் இம்ரான் கான் ஆட்சியமைக்கிறார். இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த பிரதமருக்கான வாக்கெடுப்பில் இம்ரான்கான் வெற்றி பெற்றார். இம்ரான் கான் கட்சியுக்கும், நவாஸ் செரீப் கட்சிக்கும் இடையே போட்டி நிலவியது.
இதில் பிலாவல் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி கலந்துக்கொள்ளவில்லை. இம்ரான் கானுக்கு 176 வாக்குகளும், ஷாபாஸ் செரீப்பிற்கு 96 வாக்குகளும் கிடைத்தது. வாக்கெடுப்பில் வெற்றிப்பெற்றதை அடுத்து இம்ரான் கான் பாகிஸ்தானில் 22 வது பிரதமராக இன்று பதவியேற்றார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற இந்த விழாவில், பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கானுக்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து கலந்து கொண்டார்.