கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி -பினராயி விஜயன்
கேரளாவில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட வரலாறு காணாத சேதத்தை தீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்ட இயற்கை பேரழிவை கருத்தில் கொண்டு தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறி இருக்கிறது.
பல இடங்களில் வெள்ளம் நீரில் வடிந்து வருவதால் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்து, சுத்தம் செய்யத் தொடங்கி உள்ளனர்.
10.28 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2.12 லட்சம் பெண்கள் மற்றும் ஒரு லட்சம் குழந்தைகள் இதில் அடங்குவர் இவர்கள் அனைவரும் 3784 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் ரூ.700 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார். ஐக்கிய அரபு எமிரேட் அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
கேரளம் புனர்வாழ்வளிக்கும் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட வேண்டும். பருவ மழையைப் பற்றி விவாதிக்க இந்த மாதம் 30-ம் தேதி கூட்டம் நடத்தப்படும் என்று கேரள முதலமைச்சர் கூறினார்.