வனுவாட்டு தீவு பகுதிகளில் இன்று கடும் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.7 ஆக பதிவு
வனுவாட்டு தீவு பகுதிகளில் ஒன்றான ஆம்ப்ரிம் தீவின் வடக்கே சில கிலோ மீட்டர்கள் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கத்திற்கு தெற்கே 190 கிலோ மீட்டர்கள் தொலைவில் போர்ட் வில்லா நகரில் வனுவாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகம் அமைந்துள்ளது.
இங்குள்ள அதிகாரிகள் கூறும்பொழுது, 15 அல்லது 30 விநாடிகள் நிலநடுக்கத்தினை நாங்கள் உணர்ந்தோம். ஆனால் வேறு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறியுள்ளனர்.
இதேபோன்று ஹவாயில் உள்ள சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்கத்தினால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளின் அதிகாரிகளும் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளனர்.