முக்கொம்பில் உடைந்த மதகுகளை முதல்வர் ஆய்வு
திருச்சி முக்கொம்பு மேலணையில் மொத்தமுள்ள 45 மதகுகளில் 8 மதகுகள் நேற்று முன்தினம் இரவும், 9வது மதகு நேற்று காலையும் உடைந்தன. உடைந்த மதகுகளை பார்வையிடுவதற்காக முதல்வர் பழனிசாமி காலை 8.45 மணியளவில் திருச்சி சென்றடைந்தார்.
முக்கொம்பு மேலணையில் உடைந்த மதகுகளை முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். அவருடன் தமிழக அமைச்சர்களும் சென்று அணையில் உடைந்த மதகுகளை பார்வையிட்டனர்.
காலை முதல் உடைந்த மதகுகளை சீரமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 3,032 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. வெண்ணாற்றில் வினாடிக்கு 3,000 கனஅடியும், கல்லணை கால்வாயில் 3,406 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது.