முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரணத்தை ஆளும் பாஜக அரசியலாக்குகிறது: சமாஜ்வாடி கட்சி குற்றச்சாட்டு
செய்திகள்
மாவட்ட செய்திகள்
விளையாட்டு
புதுச்சேரி
மும்பை
பெங்களூரு
சினிமா
ஜோதிடம்
ஆன்மிகம்
தலையங்கம்
உங்கள் முகவரி
மணப்பந்தல்
DT Apps
E-Paper
DTNext
Thanthi Ascend
Thanthi TV
தேசிய செய்திகள்
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரணத்தை ஆளும் பாஜக அரசியலாக்குகிறது: சமாஜ்வாடி கட்சி குற்றச்சாட்டு
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரணத்தை ஆளும் பாஜக அரசியலாக்குகிறது: சமாஜ்வாடி கட்சி குற்றச்சாட்டு
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரணத்தை ஆளும் பாஜக கட்சி அரசியலாக்குகிறது என சமாஜ்வாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் சுனில் யாதவ் கூறியுள்ளார். #SamajwadiParty
பதிவு: ஆகஸ்ட் 26, 2018 07:06 AM
புதுடெல்லி,
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி காலமானார்.
அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவரது அஸ்தி நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் அனைவரிடமும் அஸ்தி அடங்கிய கலசம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரணத்தை ஆளும் பாஜக அரசியலாக்குகிறது என சமாஜ்வாடி கட்சியின் செய்தி தொடர்பாளர் சுனில் யாதவ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்தவர். இந்நிலையில் அவரது அஸ்தியை நாடு முழுவதும் உள்ள ஆறுகளில் கரைக்கும் நிகழ்ச்சியை பாஜக அரசு நிகழ்த்தி வருகிறது. பிரதமர் மோடிக்கு, வரும் மக்களவை தேர்தலில் தன் கட்சி வலுவிழந்து வருவது நன்றாக தெரியும். தேர்தலில் பாஜக பெயர் வெளியில் தெரிவதற்கே இந்நிகழ்ச்சி நடத்தி வருகிறது” எனக் கூறினார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், வாஜ்பாயின் மருமகளுமான கருணா சுக்குலா அரசியல் லாபத்திற்காகவே பாஜக அரசு வாஜ்பாயின் மரணத்தை பயன்படுத்தி கொள்கிறது எனக் கூறினார். மேலும் அவர் கூறுகையில், வரும் மக்களவை தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கே பாஜக அரசு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதும் கரைக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. வாஜ்பாய் உயிருடன் இருக்கும் போது அவரை பற்றி நினைவில் கொள்ளாத சத்தீஷ்கர் அரசாங்கம், அவர் இறந்ததும் அரசியல் லாபத்திற்கு இரங்கல் கூட்டங்களை நடத்தி வருகிறது எனக் கூறினார்.
இதனிடையே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா லக்னோவில் நடைபெற்ற இரங்கல் சந்திப்பு கூட்டத்தில் பேசுகையில், இந்த கேள்வியை எழுப்பும் தலைவர்கள் தங்களுக்குள்ளே ஆய்வு செய்து கொள்ள வேண்டும். வாஜ்பாய் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் மரியாதை கொடுத்தவர் எனக் கூறினார். இரங்கல் கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங், சிவ்பால், காங்கிரஸ் தலைவர்கள் ராஜ் பாப்பர், ஜிதின் ப்ரசாத் மற்றும் பிறகட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.