Breaking News
நிவாரண பொருட்கள் வழங்க சென்ற வாகனங்களில் பிரபாகரன் படம்: கேரளா போலீசார் சீமானிடம் விசாரணை

நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வெள்ள நிவாரணப் பொருட்களைச் சேகரித்து கொண்டு கடந்த 25-ந் தேதி மாலை 6 மணியளவில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாசேரி முகாமிற்கு சென்று மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.

நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு தமிழகம் திரும்பும் போது, நிவாரணப் பொருட் களை ஏற்றி சென்ற வாகனங்களில் விடுதலைப்புலிகள் தலைவர் மறைந்த பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகைகள் இருந்ததை சுட்டிக்காட்டி அங்கிருந்த பா.ஜனதாவினர் நிவாரணப் பொருட் களை வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையொட்டி கோட்டயம் கிழக்கு போலீஸ் நிலையத்தில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கச் சென்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 100-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினரிடம் 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் வாகனங்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.