பாதிப்பை சீரமைக்க ஒருமாத சம்பளத்தை கொடுங்க: பினராயி வேண்டுகோள்
கேரளாவைச் சேர்ந்தவர்கள் அனைவரும், வெள்ள பாதிப்பை சீரமைப்பதற்காக, தங்கள் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கும்படி, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாத துவக்கத்தில், கேரளாவில் கொட்டித் தீர்த்த பலத்த மழையால், மாநிலம் முழுவதும் வெள்ளக் காடானது.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன. இந்நிலையில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மாநிலத்தவருக்கு, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் விடுத்த கோரிக்கை:வெள்ளம் மற்றும் மழையால் பலியானோரின் எண்ணிக்கை, 302 ஆக உயர்ந்துள்ளது. இன்னும், 4.62 லட்சம் பேர், முகாம்களில் தங்கியுள்ளனர்.புனரமைப்பு பணிகளுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் மலையாளிகள், தங்கள் ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.