குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுமா?- தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை முடிந்ததையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இப்போது உள்ள சட்டத்தின் படி, குற்ற வழக்குகளில் சிக்கியவர் களை நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்தால் மட்டுமே அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக இருந் தால் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்ததும் அவர்களது பதவி பறிபோகும்.
இந்நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘பப்ளிக் இன்ட்ரஸ்ட் பவுண்டேசன்’ உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தது. அதில், குற்ற வழக்குகளில் சிக்கி, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட ஒரு தனி நபரோ அல்லது எம்.பி., எம்.எல்.ஏ.க்களோ தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இதுபோலவே, குற்ற வழக்குக ளில் சிக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க் கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்த உடனே அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த அமர்வில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகி யோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வழக்குகள் மீதான இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, அரசியல் சாசன அமர்வு முன்பு மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகாபால், “அரசியல் நடைமுறையை தூய்மையாக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தின் நோக்கம் பாராட்டுக்குரியது. ஆனால், இதை நீதிமன்றத்தால் செய்ய முடியுமா என்பதுதான் கேள்வி. இதற்கான பதில் முடி யாது என்பதுதான். மேலும் ஒரு வர் குற்றவாளியா என நீதிமன்றம் முடிவு செய்வதற்கு முன்பே அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கக் கூடாது” என்றார்.
நீதிபதிகள் கூறும்போது, “தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகள் தங்கள் உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகள் பற்றிய விவரத்தை வெளியிட வேண்டும் என நிபந்தனை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விடலாமா” என கேள்வி எழுப் பினர்.
இந்த வழக்குகள் தொடர்பாக, மனுதாரர்கள், தேர்தல் ஆணையம், மத்திய அரசு உட்பட அனைத்து தரப்பும் தங்களது வாதங் களை முடித்துக் கொண்டதை யடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப் படுவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்று தெரிவித் தார்.