கேரள வெள்ளத்தை அரசியலாக்க விரும்பவில்லை : ராகுல்
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 2 நாட்களாக நேரில் ஆய்வு செய்த காங்., தலைவர் ராகுல், நிவாரண முகாம்களில் தங்கி இருப்போரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து இன்று (ஆக., 29)கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள மக்களுக்கு எனது ஆதரவை தெரிவிக்கவே வந்தேன். கேரள வெள்ள பாதிப்பு சூழ்நிலையை அரசியலாக்க விரும்பவில்லை.இந்த இயற்கை பேரிடர் குறித்து விமர்சிக்க போவதில்லை. நேற்று பல முகாம்களுக்கும் சென்றேன். அங்கு மக்கள் கவலையுடன் உள்ளனர்.
கேரள முதல்வரிடமும் பேசினேன். மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து, அவர்களின் வீடுகளை திரும்ப கட்டிக் கொள்ள உதவுவது மிக முக்கியம். வாக்குறுதி அளித்தபடி விரைவில் நிவாரண தொகை வழங்க வேண்டும். கேரளாவுக்கு போதிய அளவிற்கு மத்திய அரசு நிதி வழங்காதது வருத்தம் அளிக்கிறது. கேரள மக்களுக்கு தனது முழு ஆதரவையும் கொடுத்து, கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.