Breaking News
விளையாட்டிற்கு முன்னுரிமை தர வேண்டும் : மோடி

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிதுள்ளார். அதில் அவர்,

தேசிய விளயைாட்டு தினத்தில் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். ஹாக்கி வீரர் மேஜர் தியார் சந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவோம். ஆரோக்கியமான இந்தியாவுக்காக விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவைக்கு முன்னுரிமை தரவேண்டும் என மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

பல்வேறு விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றும் அனைவரும் எனது வணக்கம். அவர்களின் கடின உழைப்பால் தான் நாம் பல்வேறு மைல்கற்களை எட்டிபிடிக்க முடிந்தது. விளையாட்டு துறை சகோதரர்களுக்கு இது சிறப்பான ஆண்டாக உள்ளது. ஆசிய விளயைாட்டு போட்டிகளிலும், காமன்வெல்த் போட்டியிலும் இந்திய தடகள வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பங்காற்றி உள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.