நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு முயற்சி: கருத்துரிமை பறிப்பதாக புகார்
எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்களை தொடர்ந்து சமூக ஊடகங்ளையும் முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. கும்பல் படுகொலைகளை தடுப்பதாக கூறி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு விதிக்க கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் நிராகரித்துள்ளது. தனிமனித உரிமைகளை பாதுகாப்பதில் பிடிவாதம் காட்டும் வாட்ஸ் ஆப் நிறுவனம் மத்திய அரசுக்கு வளைந்து கொடுக்க மறுக்கிறது. ஆனால் மத்திய அரசோ வாட்ஸ் ஆப் அமெரிக்காவில் இருந்து கொண்டு செயல்படுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது. பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைததலங்களை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது
டெல்லி: எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்களை தொடர்ந்து சமூக ஊடகங்ளையும் முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. கும்பல் படுகொலைகளை தடுப்பதாக கூறி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு விதிக்க கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் நிராகரித்துள்ளது. தனிமனித உரிமைகளை பாதுகாப்பதில் பிடிவாதம் காட்டும் வாட்ஸ் ஆப் நிறுவனம் மத்திய அரசுக்கு வளைந்து கொடுக்க மறுக்கிறது. ஆனால் மத்திய அரசோ வாட்ஸ் ஆப் அமெரிக்காவில் இருந்து கொண்டு செயல்படுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளது. பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைததலங்களை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
இதற்கான நிபந்தனைகளை ஏற்றே தீர வேண்டும் என்று சமூக வலைத்தளங்களுக்கு நிர்பந்தம் விதித்துள்ளது. நிபந்தனைகளை ஏற்காவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று மத்திய அரசு எச்சரிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் ஆப் போன்ற நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விமர்சனங்களை முடக்குவதே மத்திய அரசின் நோக்கம் என புகார் எழுந்துள்ளது