புத்தர் ஞானம் பெற்ற புனித தலத்தின் அருகே பாலியல் பலாத்காரம்: துறவி கைது
பீகார் மாநிலத்தில் புத்த கயாவின் அருகே உள்ள மாஸ்டிபூர் என்ற கிராமத்தில் பிரசன்னா ஜோதி புத்த பள்ளி மற்றும் தியான மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அசாம் மாநிலம் ஆங்லாங் மாவட்டத்தில் இருந்து சுமார் 15 மாணவர்கள் இந்த பள்ளியில் தங்கி படித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் புத்த துறவி ஒருவர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்துவதாக போலீசாருக்கும் மாணவர்கள் புகார் அளித்தனர். இது குறித்து கயா நகர காவல் கண்காணிப்பாளர் அனில் குமார் கூறுகையில்,
புத்த துறவி பாலியல் ரீதியாக தொடர்ந்து தங்களை துன்புறுத்தி வருவதாக மாணவர்களிடம் இருந்து தகவல் கிடைத்தது. இதன் பின்னர் உடனடியாக துறவி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ராஜ்குமார் ஷா துணை கண்காணிப்பாளர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.
மஹிலா தானா காவல்நிலையத்தின் பொறுப்பு அதிகாரி கூறுகையில், மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் இவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
துறவிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் முடிவுகளின் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் இவ்வாறு அவர் கூறினார்.
பீகார் மாநிலத்தில் புத்தர் ஞானம் பெற்ற புனிதத் தலத்தின் அருகே 15 சிறுவர்களைப் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.