Breaking News
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மூன்றாவது சுற்றில் ரோஜர் பெடரர், ஜோகோவிச்

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் 5 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரான்ஸ் வீரர் பெனோயிட் பைரேவை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில், ரோஜர் பெடரர் 7-5, 6-4. 6-4 என்ற புள்ளிக் கணக்கில் பெனோயிட் பைரேவை வீழ்த்தினார். அடுத்து நடைபெற உள்ள 3வது சுற்றில் ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோசுடன் மோத உள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மற்றொரு ஆட்டத்தில் முண்னணி செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், அமெரிக்க விரரான டென்னைஸ் சான்ட்க்ரன்னை எதிர்கொண்டார்.

ஆட்டத்தில் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டையும் 6-3 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டில் 6-7 என்ற புள்ளிக்கணக்கில் ஜோகோவிச் பின் தங்கினார். பின்னர் தனது வேகத்தை காட்டிய ஜோகோவிச் 4வது செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் ஜோகோவிச் 6-1, 6-3, 6-7, 6-2 என்ற புள்ளிக்கணக்கில் சான்ட்க்ரன்னை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.