என்டிஆர் மகன் ஹரிகிருஷ்ணா உடல் அரசு மரியாதையுடன் தகனம்: துணை குடியரசுத் தலைவர், ஆளுநர் அஞ்சலி
சாலை விபத்தில் உயிரிழந்த, மறைந்த என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணாவின் உடல், நேற்று மாலை பிலிம் நகரில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
மறைந்த நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் மகன் ஹரிகிருஷ்ணா (61) நேற்று முன் தினம் காலை, தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத் தில் சாலை விபத்தில் உயிரிழந் தார். தனது 4 வயது முதல் நடிக்க தொடங்கிய ஹரிகிருஷ்ணா, சினிமா, அரசியல் ஆகிய இரு துறைகளிலும் சாதித்தார். தற்போது தெலுங்கு தேச கட்சியின் செயற் குழு உறுப்பினராக இருந்தார்.
இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்த ஹரிகிருஷ்ணாவின் உடல், ஹைதராபாத்தில் மெஹதி பட்டினத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டது. அங்கு, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஆளுநர் நரசிம்மன், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், திரளான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஹைதரா பாத் பிலிம் நகரின் அருகே உள்ள ‘மகா பிரஸ்தானம்’ என்றழைக்கப்படும் அதிநவீன மயானத்தில், ஹரிகிருஷ்ணாவின் உடல் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு 2-வது மகனும், நடிகருமான கல்யாண் ராம் தீ மூட்டி, இறுதி சடங்குகள் செய்தார். முன்னதாக, அவரது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
ஹரிகிருஷ்ணாவின் 62-வது பிறந்த நாள் செப்டம்பர் 2-ம் தேதி வருகிறது. ஆனால், ‘‘வழக்கம் போல் பிறந்த நாள் விழாவை உற்சாகமாக கொண்டாட வேண் டாம். அதற்கு பதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நிதி உதவி செய்யுங்கள் என்று தனது ரசிகர்களுக்கு ஹரிகிருஷ்ணா கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரம் பறிமுதல்
திருப்பதி – சென்னை நெடுஞ் சாலையில் திருப்பதி அதிரடிப் படையினர் நேற்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த ஒரு வேன், அவர்களின் சோதனைக்கு உட்படாமல் வேக மாக சென்றது. இதையடுத்து, அந்த வேனை அதிரடிப்படையி னர் துரத்திச் சென்றனர். இதனால் செம்மரக் கடத்தல் கும்பல், வேனை நகரி அருகே விட்டுவிட்டு தப்பியோடியது.
பின்னர், அந்த வேனை சோதனை செய்தபோது, அதில் 110 செம்மரங்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக் கும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து, அதிரடிப்படையினர் வழக்குப் பதிவு செய்து தப்பி யோடிய கடத்தல் கும்பலைத் தேடி வருகின்றனர்.