ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்ற சமந்தா: முந்தியடித்து வாங்கிய மக்கள்
நடிகை சமந்தா சென்னையில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டில் காய்கறி விற்றுள்ளார். திருமணத்திற்கு பிறகும் திரையுலகில் சாதிக்க முடியும் என்று நிரூபித்த நடிகைகளில் ஒருவராகியுள்ளார் சமந்தா. நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு அவர் மார்க்கெட் பாதிக்கவில்லை. தமிழ், தெலுங்கில் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
மந்தா படங்களில் நடிப்பதுடன் பிரதியுஷா என்ற அறக்கட்டளையை நடத்தி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்தார் சமந்தார். மேலும் பல சமூக நல பணிகள் செய்து வருகிறார். இந்நிலையில் ஏழைகளுக்கு அளிக்க நிதி திரட்ட காய்கறி விற்றுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டுக்கு சென்ற சமந்தா அங்கு காய்கறி கடை போட்டு விற்பனை செய்தார். சமந்தா வந்த செய்தி அறிந்து அங்கு கூட்டம் கூடிவிட்டது. அவர் சொன்ன விலைக்கு காய்கறிகளை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். சிறிது நேரத்தில் அவர் கடையில் இருந்த காய்கறிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது.
நடிகையாக இருந்து நிறைய சம்பாதிக்கிறார், ஆந்திராவில் பெரிய இடத்து மருமகளாக உள்ளார். அப்படிப்பட்ட சமந்தா ஏன் காய்கறி விற்பனை செய்ய வேண்டும் என்று நினைக்கலாம். நலிந்த மக்களுக்கு பணம் கொடுக்க காய்கறி விற்றாராம் சமந்தா. அவர் கடையில் அதிக விலை கொடுத்து காய்கறிகளை வாங்கிச் சென்றுள்ளனர்.