அதிபர் ட்ரம்ப் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்: வடகொரிய அதிபர் கிம் கருத்து
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது நம்பிக்கை வைத்துள் ளேன் என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்த வடகொரியா கடந்த ஏப்ரலில் அமைதி பாதைக்கு திரும்பியது. கடந்த ஜூன் 12-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்பை, அதிபர் கிம் சந்தித்துப் பேசினார். அப்போது அணு ஆயுதங்களை ஒழிக்க கிம் உறுதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் வடகொரியாவின் புங்கி-ரி அணு ஆயுத சோதனைக் கூடம் தகர்க்கப்பட்டது. டாங்-சாங் ஏவுகணை சோதனை தளமும் நிரந்தரமாக மூடப்பட்டது. இருப்பினும் அணு ஆயுத ஒழிப் பில் வடகொரியா மெத்தனமாக செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இந்தப் பின்னணியில் தென் கொரியாவைச் சேர்ந்த உயர் நிலைக் குழு கடந்த 5-ம் தேதி வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்தித்துப் பேசியது. அப்போது கிம் கூறியபோது, “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது நம்பிக்கை வைத்துள் ளேன். அவரது ஆட்சிக் காலத்துக் குள் வடகொரியாவின் அணு ஆயுத ஒழிப்பு முழுமை பெறும்” என்று தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘என் மீது நம்பிக்கை கொண்டுள்ள அதிபர் கிம்முக்கு நன்றி. நாம் இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக வடகொரியா, அமெரிக்கா மீண்டும் பேச்சு வார்த்தையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 18, 19, 20-ம் தேதி தென் கொரிய, வடகொரிய உச்சி மாநாடு வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற உள் ளது. அதன்பின் இந்த மாத இறுதி யில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் சந்தித்துப் பேச உள்ளார். அப்போது வடகொரியா வின் அணு ஆயுத ஒழிப்பு குறித்து விரிவாக விவாதிக்கப் படும் என்று தெரிகிறது.