இந்திராணியின் ஜாமீன் மனு நிராகரிப்பு
மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஷீனாபோரா கடந்த 2012 ஏப்ரல் 24-ம் தேதி காணாமல் போனார். அவர் கொலை செய்யப் பட்டது கடந்த 2015-ல் வெளிச்சத் துக்கு வந்தது. இதுதொடர்பாக ஷீனாபோராவின் தாய் இந்திராணி, கடந்த 2015 ஆகஸ் டில் கைது செய்யப்பட்டார்.
மும்பை சிறையில் அடைக்கப் பட்டுள்ள அவர், உடல் நிலை மற்றும் சிறையில் உயிருக்கு ஆபத்து உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஜக்டாலே முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ வழக் கறிஞர் கூறியபோது, “இந்தி ராணிக்கு 24 மணி நேர பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்று தெரி வித்தார். இதை ஏற்ற நீதிபதி, இந்திராணியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.