உத்தரபிரதேசத்தில் வாட்ஸ்அப் பார்த்ததால் நின்றுபோன திருமணம்
உத்தரபிரதேசத்தில் மணப் பெண் அதிகமாக வாட்ஸ் அப் பார்த்ததால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தினர்.
உத்தரபிரதேசத்தில் அமோரா மாவட்டம் நாகான் சதத் என்ற கிராமத்தைச் சேர்ந்த யுரோஜ் மெஹந்தி என்பவரின் மகளுக்கும் காமர் ஹைதர் என்பவரின் மகனுக் கும் திருமணம் நிச்சயமானது. கடந்த 5-ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. திருமண ஏற்பாடுகளை செய்துவிட்டு பெண் வீட்டார் காத்திருந்தனர். ஆனால், முகூர்த்த நேரம் நெருங்கும் நிலையிலும் மாப்பிள்ளை வீட்டார் வராததால் காமர் ஹைதருக்கு மணமகளின் தந்தை யுரோஜ் மெஹந்தி போன் செய்து விசாரி்த்தார்.
அப்போது, மணமகள் நீண்ட நேரம் வாட்ஸ் அப் பார்ப்பதாகவும் திருமணத்துக்கு முன்பே மணமகனின் சகோதரர்களுக்கு வாட்ஸ் அப்பில் செய்திகள் அனுப்பியதாகவும் அதனால், பெண்ணை பிடிக்கவில்லை என்று கூறி திருமணத்தை நிறுத்திவிட்ட தாக காமர் ஹைதர் தெரிவித் துள்ளார். இதனால், திருமணம் நின்றுபோனது. கடைசி நேரத்தில் மணமகன் வீட்டார் ரூ.65 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் அதற்கு மறுத்ததால் திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் யுரோஜ் மெஹந்தி போலீஸில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.