டிரம்பின் மாஜி ஆலோசகர் கைது
2016ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தல் பிரசாரத்தின்போது, டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷ்யா மறைமுகமாக உதவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்த ஜார்ஜ் பபடோ போலஸிடமும் விசாரணை நடத்தியது. டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தில் இடம்பெற்றிருந்த ஜார்ஜ், ரஷ்யாவுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.