வகுப்பறையில் இருக்கும்போது வாட்ஸ்அப், பேஸ்புக் பயன்படுத்தினால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை
வகுப்பறையில் இருக்கும்போது வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங் களை பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, ஈரோடு மாவட்டம் கோபி யில் நேற்று மாரத்தான் போட்டி நடந்தது. அதைத் தொடக்கிவைத்த பிறகு செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாணவர்களை பள்ளியின் கழிப் பறையை சுத்தம் செய்ய வற்புறுத்திய எலத்தூர் பள்ளியின் தலைமை ஆசிரி யரை இடமாறுதல் செய்ய உத்தரவிடப் பட்டுள்ளது.
நவீன அறிவியல் ஆய்வகம்
அரசுப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை லயன்ஸ் கிளப் மூலம் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 20 பள்ளிகளுக்கு ஒரு வாகனம் என்ற விகிதத்தில் வாகனம் மூலம் சுத்தம் செய்யப்படும். மத்திய, மாநில அரசின் நிதியுடன் நவீன அறிவியல் ஆய்வகம் 2 மாத காலத்துக்குள் 600 பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.
கியூ.ஆர் கோடை பயன்படுத்தி, செல்போன்மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்களை நடத்த அனு மதி அளிக்கப்பட்டுள்ளது அதை தவிர வகுப்பறையில் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தினால், அந்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புதிய பாடத் திட்டத்தால் கடுமையான பணி சுமை உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த பாடத் திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படும் என்றார்.