நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 480 இடங்கள்
ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் காலியாக உள்ள 480 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Mining Sirdar: 269 இடங்கள் (பொது-32, ஒபிசி-22, எஸ்சி-47, எஸ்டி-168). தகுதி: மைனிங் சிர்தார் சான்று, கேஸ் டெஸ்டிங் சான்று மற்றும் முதலுதவி சான்று பெற்றிருக்க வேண்டும்.
2. Electrician (Non-Excg.) Technician: 211 இடங்கள் (பொது-24, ஒபிசி-36, எஸ்சி-46, எஸ்டி-105). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் டிரேடில் ஐடிஐ முடித்து அப்ரன்டிஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ₹100/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் www.centralcoalfields.in என்ற இணையதளம் மூலம் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.9.2018.
பிரின்ட் அவுட் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 20.9.2018.