விளையாட்டு வீரர்களுக்கு தென்கிழக்கு ரயில்வேயில் அரிய வாய்ப்பு
பணி: Sports Persons Against Sports Quota.
விளையாட்டு பிரிவுகள் வாரியாக காலியிடங்கள் விவரம்:
1. வில்வித்தை (பெண்)- 2 இடங்கள், பாடி பில்டிங் (ஆண்)-1, குத்துச்சண்டை (ஆண்)-1, பிரிட்ஜ் (ஆண்)-1, கிரிக்கெட் (ஆண்)-1, ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆண்)-1, ஹாக்கி (பெண்)-2, கபடி (ஆண்)-1, கபடி (பெண்)-2, பளு தூக்குதல் (பெண்)-2, நீச்சல் (ஆண்)-1, வாட்டர் போலோ (ஆண்)-1.
சம்பளம்: ரூ 5,200-20,200. வயது வரம்பு:1.1.2019 அன்று 18 முதல் 25க்குள். ஒபிசி/எஸ்சி/எஸ்டியினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு கிடையாது.
தகுதி: பிளஸ் 2 அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ.
விளையாட்டு தகுதி: World Cup/ World Championship/Asian Games/Common Wealth Games/ South Asian Federation Games/ VSIC Championship/National/University/Indian Olympic Association/Federation Cup Championships/Asia Cup அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு திறன் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஒபிசிக்கு ₹500/-. பெண்கள்/சிறுபான்மையினர்/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர்/எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ₹250/-. இதை FA & CAO, South Eastern Railway, Garden Reach-700043 என்ற பெயரில் GPO/Kolkata வில் மாற்றத்தக்க வகையில் டிடியாக அல்லது போஸ்டல் ஆர்டராக எடுக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ser.indianrailways.gov.in இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Assistant Personnel Officer (Recruitment),
Railway Recruitment Cell,
Bungalow No: 12A, Garden Reach,Kolkata- 700 043.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 19.9.2018.