மல்லையா விவகாரம்: பா.ஜ., – காங்., நீயா? நானா?
விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக காங்.,, பா.ஜ., மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன. விஜய் மல்லையாவை அருண் ஜெட்லி சந்தித்தார் என காங்., குற்ற்சாட்டி வரும் நிலையில், வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நீரவ் மோடியை ராகுல் சந்தித்ததால் பா.ஜ., குற்றம்சாட்டி உள்ளது.
வங்கிகளில் பெற்ற ரூ.9000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சந்தித்ததற்காக அவர் பதவி விலக வேண்டும் என காங்., தலைவர் ராகுல் வலியுறுத்தி வருகிறார். ராகுல் கூறுவது உண்மை தான் எனவும், ஜெட்லி – மல்லையாவை சந்தித்ததை தான் பார்லி.,வளாகத்தில் சந்தித்ததாகவும் காங்.,கின் புனியாவும் கூறி இருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள பா.ஜ.,வின் ஷிஜத் பூனாவாலா, ஜெட்லி – மல்லையா சந்திப்பிற்கு புனியா சாட்சி என்றால், நானும் திருக்குரான் மீது சத்தியம் செய்து சொல்கிறேன், பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி செய்த நீரவ் மோடியை 2013 ல் ராகுல் சந்தித்தார். எனது ஞாபகம் சரியானது என்றால் 2013 செப்.,11 ல் டில்லியில் ஓட்டல் ஒன்றில் நடந்த திருமண நிகழ்ச்சியில் இந்த சந்திப்பு நடந்தது. அதே காலத்தில் தான் சோக்சி, நீரவ் மோடி ஆகியோருக்கு விதிகளை மீறி கடன் வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார குற்றங்களுக்கான சட்டத்தை மோடி அரசு தீவிரப்படுத்தியதால் நேர்மையானர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக விஜய் மல்லையா விவகாரத்தை ராகுல் கிளப்பி உள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.