பழவேற்காடு பகுதியில்முழு கடையடைப்பு
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் அடைப்பு ஏற்பட்ட.முகத்தூவாரத்தால் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் முடங்கியதால் மீனவர்கள் தங்களுக்கு தூர்வாரி தூண்டில் வளைவுடன் மீன்பிடித் துறைமுகம் அமைக்க கோரி இன்று முழு கடையடைப்பு ஈடுபட்டு பழவேற்காடு ஏரி இணையும் முகத்துவாரத்தில் கறுப்புகொடி கட்டிய படகுகளுடன் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அரசு மீனவர்கள் இந்த பிரச்சினையில் செவிசாய்த்து உடனடியாக நிரந்தர மீன்பிடி துறைமுகத்தை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்,
திருவள்ளூர்
மாவட்டம் பழவேற்காடு பகுதியில் நிரந்தரமாக முகத்துவாரம் மீன்பிடித் துறைமுகம் அமைத்து தரக்கோரி லைட் அவுஸ் குப்பம் கோட்டைகுப்பம் பழவேற்காடு ஊராட்சிகளில் அடங்கிய கடலோரப் பகுதி மீனவ சங்கம் தமிழ்நாடு நாட்டுப்படகு மீனவர் சங்கம் மற்றும் ஆந்திர நாட்டுப்படகு மீனவர் சங்கங்கள் ஒருங்கிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழவேற்காடு பகுதிகள் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளிடம் இப்பிரச்சனையை கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதுடன் சட்டமன்ற உறுப்பினர் சிறுனியம்பலராமன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கவனத்திற்கு பலமுறை வலியுறுத்தி மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது முற்றிலும் முகத்துவாரம் மணல்மேடாகிஅழிந்து மீன்பிடித்தொழில் முடங்கியுள்ளது கடந்த 9 நாட்களாக இப்பகுதி மக்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தை அறிவித்து பழவேற்காடு பகுதியில் கடலும் ஏரியும் இணையும் பகுதியில் தூர்ந்துபோய் உள்ள முகத்துவாரத்தில் கறுப்பு கொடி கட்டி தங்களது எதிர்பை பதிவு செய்து படகுகளை கொண்டு சென்று நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பொன்னேரி. கோட்டாட்சியர் முத்துசாமி மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்
பேட்டி
திரு.ரமேஷ்..
மீனவர் ..