மகளுக்காக ரூ.10 கோடியில் மாளிகை கட்டிய இந்திய கோடீசுவரர்
ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படிக்க செல்லும் தனது மகளுக்காக, இந்திய கோடீசுவரர் ஒருவர் ரூ.10 கோடி மதிப்பிலான மாளிகையை ஒன்றை வாங்கியுள்ளார்.
ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள “ஈடன் மாளிகை’யை, அந்தக் கோடீசுவரர் ரூ.10 கோடிக்கு வாங்கியுள்ளார். 1860-ல் கட்டப்பட்ட இந்த மாளிகை, முதல் உலகப் போரில் இங்கிலாந்தின் படை தளபதி இயர்ல் ஹேக்குக்குச் சொந்தமானது.
8 படுக்கையறைகளைக் கொண்ட இந்த மாளிகையில் திரையரங்கம், மது குடிக்கும் இடம், 5 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழுவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும், தனது மகள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில், அவரைக் கவனித்துக் கொள்ள மேலாளர் ஒருவர், 3 பாதுகாவலர்கள், தோட்டக்காரர் , பணிப்பெண் , சமையல்காரர், தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவுகளில் சிறந்த தனிப்பட்ட சமையல்காரர் , 3 உதவியாளர்கள், வாகன ஓட்டுநர் உள்பட 12 வேலையாட்களை நியமித்துள்ளார். ஆனால் அந்தக் கோடீசுவரர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.