Breaking News
எனது உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் உள்ளது விருதுநகர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி புகார்

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டுள்ள அக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகிய 3 பேரும் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கோர்ட்டு உத்தரவுப்படி இவர்கள் 3 பேரையும் ஆஜர்படுத்த இயலாத நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கால அவகாசம் கேட்டு விருதுநகர் 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்தனர்.

இதைதொடர்ந்து அவர்கள் 3 பேரையும் இன்று விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார்.

அதன்படி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரத்தில் கைதான நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். செப்.19 வரை அவர்களது காவலை நீட்டித்து விருதுநகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர் நீதிமன்றத்தில், எனது உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் உள்ளது என்று நிர்மலா தேவி புகார் கூறி உள்ளார்.

3 பேருக்கும் 1,360 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. மேலும் மீண்டும் நாளை மறுநாள் பேராசிரியை நிர்மலா தேவி ஆஜராக விருதுநகர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.