பிரதமர் நரேந்திர மோடிக்கு 68-வது பிறந்த நாள்: ஜனாதிபதி, தலைவர்கள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடியின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள், பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 68-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி, உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணா சிக்கு 2 நாள் பயணமாக மோடி நேற்று சென்றார். அவரை அங்கன் வாடி பணியாளர்கள் வரவேற்ற னர். வாரணாசியில் நரூர் என்ற கிராமத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் பிரதமர் மோடி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். பள்ளிக் குழந்தைகளிடையே அவர் பேசி னார். அப்போது அவர், பள்ளி மாணவர்களின் எதிர்காலம் சிறப் பாக அமைய வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அவர்களின் மனதில் உயர்ந்த லட்சியங்களும் நாட்டுப் பற்றும் ஏற்படும் வகையில் அறிவுரை வழங்கினார்.
முன்னதாக, நேற்று காலை முதலே பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் குவிந்தன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் பதிவிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் பல்லாண்டு காலம் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘தொலை நோக்கு பார்வை கொண்ட மோடியின் தலைமையின் கீழ் நாடு வேக மான வளர்ச்சி அடைந்து வருகிறது. அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கிய மும் பெற்று வாழ வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தலைவர் அமித் ஷா தனது வாழ்த்துச் செய்தியில், ‘‘பிரத மர் நரேந்திர மோடியால் உறுதி யான தொலைநோக்கு கொண்ட தலைமை நாட்டுக்கு கிடைத்துள் ளது. அவரது தலைமையில் வளர்ச்சி என்பதன் பொருளாக இந்தியா திகழ்ந்து வருகிறது’’ என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதி வில், ‘‘பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் எப்போதும் ஆரோக்கியமும் மகிழ்ச் சியும் பெற வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார். தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர் களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் நன்றி கூறியுள்ளார்