அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதில் புதிய கட்டுப்பாடு
டிரம்ப் நிர்வாகம் இந்த அனுமதியை திரும்பப் பெறுவதற்கு முடிவு செய்துள்ளது. இது இந்தியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
இந்த நிலையில் அமெரிக்காவில் குடியிருப்பதற்கு நிரந்தர குடியுரிமை வழங்குகிற ‘கிரீன் கார்டு’ வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை, அரசுக்கு அளித்துள்ள ஆலோசனையில், அமெரிக்காவில் உணவு மற்றும் நிதி உதவி பெற்று வந்த பிற நாட்டினர் அல்லது பெற விரும்புகிற பிற நாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) வழங்க தேவையில்லை என்று கூறி உள்ளது.
இந்த ஆலோசனையை டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து ஏற்றுக்கொண்டு, உத்தரவு பிறப்பித்தால் இதுவும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் உள்நாட்டு பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ள இந்த திட்டத்தை பேஸ்புக், மைக்ரோசாப்ட், டிராப்பாக்ஸ், யாகூ, கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை அமல்படுத்தினால், ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும் என இவை தெரிவித்துள்ளன.