மலேசிய மணலில் ஊழல் நடந்து வருவதாக தேமுதிகவை சேர்ந்த முன்னாள் எதிர்கட்சி துணை தலைவர் மோகன்ராஜ் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் .
கமிஷன் தருபவர்களுக்கு டெண்டர் வழங்கி கூடுதல் விலைக்கு விற்கும் மலேசிய மணலில் ஊழல் நடந்து வருவதாக தேமுதிகவை சேர்ந்த முன்னாள் எதிர்கட்சி துணை தலைவர் மோகன்ராஜ்
திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டியருகே
தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த பிறந்தநாள் மற்றும் கட்சியின் 14வது ஆண்டு துவக்கவிழாவைமுன்னிட்டு
நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நலத்திட்டங்களை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் .
திருவள்ளூர் மாவட்டம்
கும்முடிப்பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கத்தில் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் மற்றும் கட்சியின் 14வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு ஒன்றிய கழக செயலாளர் ராமசுப்பிரமணியன் தலைமையில் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியும் கட்சி பொதுக்கூட்டமும் அங்குள்ள பேருந்து நிலையத்தில் நடைபெற்றது .
இதில் தேமுதிக கட்சியின் அவைத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சி துணைதலைவருமான மோகன்ராஜ்
மாவட்ட செயலாளர் இரா.சேகர் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர் பாபுராவ்
உள்ளிட்ட திரளான தேமுதிகவினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர் .இதில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் எதிர்கட்சி துணை தலைவருமான மோகன்ராஜ் மலேசிய மணல் விற்பனையில் மக்களிடம் தமிழக அரசு கூடுதல் லாபம் பார்ப்பதாகவும் கமிஷன் வாங்கி கொண்டு எண்ணூர்காமராஜர் துறைமுகத்தில் மலேசிய மணல் விற்பனையை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையோடு ஆன்லைன் என்ற பெயரில் விற்பனை செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார். தனியாரால் டெண்டர் மூலம் குறைந்த விலைக்கு மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் கொண்டுவந்த மணல் அமைச்சருக்கு கப்பம் கட்ட வேண்டியுள்ளதால்கூடுதல் விலைக்கு மக்கள் தலையில் சுமத்துப்பட்டு விற்கப்படுவதாக தெரிவித்த அவர் இதனால் சென்னை மற்றும் புறநகர் திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மோகன்ராஜ் தெரிவித்தார்.
கடந்த ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதும் .பெட்ரோல் விலை குறைந்து இருந்தது என்றும் தற்போது
கச்சா எண்ணெய் விலை.குறைந்திருக்கும் போதே மோடி அரசு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி மக்களை துன்பத்திற்கு ஆளாக்கியுள்ளதாக குற்றம்சாட்டினார்.
பேட்டி
திரு.மோகன் ராஜ் முன்னாள் எம்எல்ஏ தேமுதிக அவைத்தலைவர் .முன்னாள் எதிர்கட்சி துணைதலைவர்