Breaking News
இரயில் நிலையங்களில் போலிசார் வேண்டும்.

இரயில் நிலையங்களில் போலிசார் வேண்டும்.
அத்திப்பட்டு புதுநகர் அத்திப்பட்டு நந்தியம்பாக்கம் மீஞ்சூர் அனுப்பம்பட்டு மற்றும் பொன்னேரி வரை உள்ள 6 இரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் இரயில்வே போலிசார் பாதுகாப்பு பணியில் இருக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.இந்த இரயில் நிலையங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் இந்த இரயில் நிலையங்களிலேயே கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும் கல்லூரி மாணவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு எற்படுவதாகவும் சில இளைஞர்கள் காலை முதல் இரவு வலை இரயில் நிலையங்களிலேயே உட்கார்ந்து பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பதாகவும் மது அருந்திவிட்டு பிளாட்பாரங்களிலேயை விழுந்து கிடப்பதும் என தொடர்ந்து பொதிமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதால் இரயில்வே போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.