Breaking News
திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வலது தொடையில் சிறிய அறுவை சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனை

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். கட்சியின் தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட இவர் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின், நேற்று இரவு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவ பரிசோதனைக்காக மு.க ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இன்று காலை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, “ திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வலது தொடையில் இருந்த நீர்க்கட்டியை நீக்க சிறிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இன்று மதியம், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.