நெல்லை, செங்கோட்டை, கொல்லத்திற்கு சிறப்பு ரயில் திருச்சி கோட்டம் அறிவிப்பு
விழுப்புரம், விருதாச்சலம் வழியாக
நெல்லை, செங்கோட்டை,
கொல்லத்திற்கு சிறப்பு ரயில்
திருச்சி கோட்டம் அறிவிப்பு
விழுப்புரம், செப். 28: சென்னையிலிருந்து செங்ககோட்டை, நெல்லை, கொல்லத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என திருச்சி ரயில்வே கேட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை எழும்பூரிலிருந்து வரும் 1 மற்றும் 8ம் தேதி இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு காலையில் 9.50 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். அதே போல் செங்கோட்டையிலிருந்து 2, 9 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 5.45 மணிக்கு சென்னை எழும்பூரை ரயில் வந்தடையும். தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூர், தென்காசி வழியாக செங்கோட்டை சென்றடையும். இதே போல் சென்னை எழும்பூரியிலிருந்து அக்டோபர் 5ம் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணகிகு் நெல்லையை சென்றடையும். 7ம் தேதி நெல்லையிலிருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்னையை மறுநாள் காலை 3.30 மணிக்கு வந்தடையும். தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், ேகாயில்பட்ட ஆகிய இடங்களில் நிற்கும்.
அதே போல் அக்டோபர் 1, 3, 5, 8, 10 ஆகிய தேதிகளில் தாம்பரம் _ கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்றடையும். இதே போல் 2,4,6,9,11 ஆகிய தேதிகளில் கொல்லத்திலிருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, சங்கரன்கோயில், தென்காசி, புனலூர், குண்டாரு வழியாக கொல்லத்திற்கு இயக்கப்படுகிறது. இதே போல் புதுச்சேரியிலிருந்து சந்திரகாசிக்கு வரும் 6ம் தேதி மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு செல்லும். விழுப்புரம், எழும்பூர், நெல்லூர், குண்டூர், புவனேஸ்வர் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.