புழல் சிறைவளாகத்தில் ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா ஆய்வு
புழல் சிறைவளாகத்தில் ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா ஆய்வு :
சிசிடிவி கேமிரா செல்போன்களை செயலிழக்கசெய்ய நவீனஜாமர் கருவிகளை பொறுத்துவதற்கான இடத்தை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்
சென்னை அடுத்த புழல் மத்தியசிறையில் உள்ள உயர் பாதுகாப்பு சிறை பிரிவில் கைதிகள் உல்லாச வாழ்க்கை வாழ சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டிருப்பதாக
ஸ்மார்ட் போன் வசதிகளுடன் இருந்த புகைப்படங்களுடன்
வாட்சப் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் சிறைத்துறை தலைவர் ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா நடத்திய அதிரடி ஆய்வில் ஆப்பிள் ஸ்மார்ட் போன் சிம்கார்டுகள் பேட்டரிகள் ஸ்டவ் அடுப்பு எல்சிடி டிவி ரேடியோ
பிரியாணி அரிசி செண்ட் பாட்டில்கள் கஞ்சா தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விலையுயர்ந்த சிகரெட் சிம்கார்டுகள் என அடுத்தடுத்து கைப்பற்றப்பட்டன.
பாக்கிஸ்தான் சிறைவாசி முகமது அடைக்கப்பட்ட உயர்பாதுகாப்பு பிரிவு சிறைக்குள்
போதைபொருள் வழக்கில் கைதாகி உயர்பாதுகாப்பு பிரிவு சிறையில் பிளாக் நான்கில் இருந்து ஐந்தாவது பிளாக்கிற்கு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு பிளாக்கில் இருந்து இன்னொறு பிளாக்கிற்கு செல்ல முயன்றவரை தடுத்தபோது சிறைக்காவலர் லிவிங்ஸ்டன் பிரபுவை போதை வழக்கு சிறைக்கைதி ரசூலுதீன் தாக்கியதால் சிறையில் நடைபெற்ற விசாரணையில் அடுத்தடுத்து செல்போன்கள் பறிமுதல் ஆகின.தொடர்ந்து ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா விசாரணை நடத்தியதில் மேலும் செல்போன்கள் சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.தொடர்ந்து இதுகுறித்து அரசியல் தலைவர்கள் புழல் சிறைசொகுசு வாழ்க்கை குறித்து விமர்சனம் எழுந்ததை அடுத்து சிறையில் இருந்து அதிரடியாக உயர்பாதுகாப்பு சிறை வாசிகள் வேலூர் கோவை கடலூர் உள்ளிட்ட
வேறு சிறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
அதே போன்று சிறைஅதிகாரிகள் பெண்சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரயதர்சினி முதல்நிலை சிறை காவலர்கள் வார்டன்கள் என 18 பேர் புதுக்கோட்டை வேலூர் கடலூர் உள்ளிட்ட பல்வேறு சிறைகளுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர் .இந்த நிலையில் சிறைக்குள் கைதிகளுக்கு அரசு விதிகளின் படி செய்யப்பட்டிருந்த 18தொலைக்காட்சி பார்க்கும் வசதி சிறையில் இருந்த 2ரேடியோ கேட்கும் வசதிகள் என திரும்பபெறப்பட்டது .
இதனிடையே சிறையில் விசாரணையை சிறைத்துறை உயரதிகாரிகள் உத்தரவில்
சிறையில் விஜிலென்சு அதிகாரிகள் சிறைவளாகத்தில் உள்ள ஓய்வு இல்லத்தில் ஆய்வு நடத்தி அதிரடி சோதனையில் உயரதிகாரிகளின் குடியிருப்புகள் மற்றும் குதிரை லாயத்தில் பணியில் இருந்த ஆயுட்கைதிகள் இருவரிடம்ததலா இரு செல்போன்கள் இரண்டு பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணை சிறையில் 150கிராம் கஞ்சாவை விசாரணை சிறைவாசி விஜயபாஸ்கருக்கு மறைத்து வழங்க கொண்டு சென்றதாக கடந்த செப்டம்பர் 2ஆம்தேதி வாணியம்பாடியை சேர்ந்த சிறைக்காவலர் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு
தற்காலிக பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் சிறையில் போதை பொருள் கடத்தல் வழக்கு கைதி ரசூலுதீன் சிறைக்காவலர் லிவிங்ஸ்டன் பிரபுவை கடந்த மாதம் தாக்க
மற்ற சிறைகாவலர்கள் புழல் போலீசாருடன் சேர்ந்து அவரது அறையில் அதிரடி சோதனை செய்து போலீசார் விசாரித்த நிலையில் சிறையின் சொகுசு வாழ்க்கை விவகாரம் சமூக வளைதளத்தில் வைரலாகியது .அதனை தொடர்ந்து சிறை அதிகாரிகள் பணிஇட மாற்றம் கைதிகள் சிறைமாற்றம் என புழல் சிறை அன்றாடம் பல புதுமைகளை சந்தித்து வந்த நிலையில்
சிறையின் பாதுகாப்பை பலப்படுத்தி உறுதி செய்ய சிறைத்துறை தலைவர் அசுதோஷ் சுக்லா சிறைத்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
விரைவில் புழல் சிறை வளாகத்தில் பெண்கள் சிறை தவிர்த்து மற்ற இடங்களில்
நவீன சிசிடிவி கண்காணிப்பு கேமிரா பொருத்துவது குறித்தும்
செல்போன்களை செயலிழக்கம்செய்யும் நவீன ஜாமர்களை பொறுத்தவும் ஆலோசனை செய்து அதனை நிறுவுவதற்கான இடங்களை சிறைவளாகத்தில் தேர்வு செய்துள்ளனர்.
இது குறித்து சிறை துறை அதிகாரி கூறுகையில்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவைமுன்னிட்டு புழல்சிறையில் நீண்ட நாட்களாக நல்லொழுக்கமாக இருந்த 200க்கும் மேற்பட்டஆண் பெண் சிறைவாசிகள் விடுதலையாகி சிறைக்கும் தமிழக அரசுக்கும் நற்பெயர் உருவாக வந்த சூழலில் சொகுசு சிறை வாசம் செல்போன் புகைப்படங்கள் அவர்களின் சிறை சொகுசு வாழ்க்கை பிற சிறை கைதிகளுக்கு அடிப்படை வசதியாய் விளங்கிய தொலைக்காட்சி ரேடியோ வசதிகள் பறிக்கப்பட்டது மற்ற சிறை வாசிகளை வேதனை அடையசெய்துள்ளது.இந்த நிலையில் சிறைக்குள் கைதிகளை நேர்காணலில் காண வரும் உறவினர்களிடம் தெரிவிப்பதை அவர்கள் கெடுபிடி என வெளியே தெரிவிப்பது வதந்தியாக உண்ணாவிரதம் இருப்பதாக தவறான தகவல் பரவி மேலும் சிறையின் நற்பெயரை கலங்கப்படுத்துவதாக சிறைவாசிகள் தெரிவித்தனர்.விசாரணை சிறையில் உள்ள சுமார் 2000 சிறைவாசிள் தண்டனை சிறைவாசிகள் 750 பேர் காலை மற்றும் மதிய உணவை வழக்கம்போல சாப்பிட்டதாக தெரிவித்தார்.
மேலும் சிறையில் மீண்டும் தூர்தர்ஷன் மற்றும் பொதிகை சேனல்களை காணவும் ஆல் இந்தியரேடியோ செய்திகளை கேட்கவும் வசதி ஏற்படுத்தி தருமாறு மற்ற கைதிகள் சிறைத்துறையினருக்கு வேண்டுகோள் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார் .