எஸ்பிஐ பணம் எடுக்கும் வரம்பு ரூ.20,000 ஆக குறைப்பு
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்.,ல் நாள் ஒன்றிற்கு பணம் எடுப்பதற்கான வரம்பு ரூ.20,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் 31 ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
மோசடிகளை தடுப்பதற்காக ஏடிஎம்.,களில் பணம் எடுக்கும் வரம்பு குறைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ விளக்கம் அளித்துள்ளது. தற்போது எஸ்பிஐ ஏடிஎம்.,யில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.40,000 ஆக இருந்து வருகிறது.
சமீப காலமாக ஏடிஎம்.,களில் இருந்து பணம் எடுப்பதில் மோசடிகள் நடப்பதாக அதிக அளவில் புகார்கள் வருவதாலும், ரொக்க பணம் இல்லாத பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காகவும் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பை குறைத்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.