சீனாவில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடிய பள்ளி குழந்தைகள்
இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை முறையில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் இன்று காந்தி ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சீனாவின் மத்திய பெய்ஜிங் நகரில் உள்ள சாவோயாங் பூங்காவில் காந்தி ஜெயந்தி இன்று கொண்டாடப்பட்டது. இங்கு அனைத்து வயது மக்களும் ஒன்றாக கூடினர்.
இதேபோன்று இந்திய தூதரகத்தின் கலாசார குழு ஒன்றும் காந்தியின் புகழ் பெற்ற பஜனை பாடல்களை பாடினர். காந்தியின் பிரபல வாசகங்களை சீன பள்ளி குழந்தைகள் படித்தனர்.
கடந்த 2005ம் ஆண்டு யுவான் ஜிகுன் என்ற சீனாவில் புகழ் பெற்ற சிற்பி வடிவமைத்த காந்தி சிலையை இந்த பூங்காவில் நிறுவி உள்ளனர். இதனால் அவரை பின்பற்றுவோர் இங்கு சென்று தங்களது அஞ்சலியை செலுத்துவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்திய தூதர் அகினோ விமல் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதர்கள் பலர் கலந்து கொண்டனர்.
காந்திஜி சீனாவுக்கு சென்றதில்லை. எனினும் அவரது எண்ணங்கள் மற்றும் தத்துவங்கள் சீனர்களால் அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டப்படுகின்றன என அகினோ விமல் கூறியுள்ளார்.