தொழிலதிபர் ரன்வீர்ஷாவின் மேல்மருவத்தூர் பண்ணை வீட்டில் 80 சிலைகள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் பழமையான கோவில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தல் தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட பல்வேறு தகவல்கள், ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சர்வதேச கடத்தல் மன்னனான ஜெர்மனியைச் சேர்ந்த சுபாஷ் கபூர் கைது செய்யப்பட்டதில், இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஏராளமான சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சமீபத்தில் சென்னையில் தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் 89 சிலைகள் மற்றும் தூண்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான காஞ்சிபுரம் மேல்மருவத்தூர் பண்ணை வீட்டில் சிலைகள் இருப்பதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.அங்கு 80 சிலைகள், கோயில்தூண்கள் பறிமுதல் செய்யபட்டன.
இது குறித்து ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியதாவது;-
இது போல் சிலைகளைவைத்து இருப்பவர்கள் அவர்களாகவே ஒப்படைத்து விட்டால் நல்லது. அல்லது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாதத்திற்குள் சிலைகளை ஒப்படைத்து விட்டால் தண்டனை இல்லை.
அறநிலையதுறையிலும் மேலும் 9 அலுவலர்களை ரிமாண்ட் செய்ய வேண்டி உள்ளது. என கூறினார்.