எத்தனை பேர் சட்டை காலரை தூக்கி விட்டு திரிந்தாலும், ஒரு பெண்ணுக்கு யாரைப் பிடிக்கிறது என்பது தான் முக்கியம் டி.ராஜேந்தர்
* தமக்கு முன்னால் வைக்கும் மைக்குகள், துப்பாக்கிகள் போல் உள்ளது – டி.ராஜேந்தர்*
செய்தியாளர்கள் தமக்கு முன்னால் வைக்கும் மைக்குகளை, துப்பாக்கிகளாக பார்ப்பதாக லட்சிய திமுகவின் தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
டி.ராஜேந்தரின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது பழைய இல்லத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிம்புவின் ரசிகர்கள் 100 பேர் வந்திருந்த நிலையில், ஒரே நேரத்தில் அவர்கள் டி.ராஜேந்தருடன் புகைப்படம் எடுக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதை அடுத்து டி.ராஜேந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது விமர்சனத்திற்குள்ளானதை நினைவு கூர்ந்த அவர், அந்த டி.ஆரை. இனி பார்க்க முடியாது என்று கூறினார்.
பின்னர் நடிகர் விஜயின் அரசியல் பேச்சு குறித்து பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த டி.ராஜேந்தர், எத்தனை பேர் சட்டை காலரை தூக்கி விட்டு திரிந்தாலும், ஒரு பெண்ணுக்கு யாரைப் பிடிக்கிறது என்பது தான் முக்கியம் என்று பதில் அளித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பெண் செய்தியாளர், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து உள்ளதாக தெரிவித்தார். இதை அடுத்து தமது கருத்தை டி.ராஜேந்தர் முழுவதுமாக விளக்கினார்.