தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும்
சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியார்களிடம் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும். மீனவர்கள் வரும் 10-ம் தேதி வரை அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறி ஒரிசாவில் கரையை கடக்கும். தமிழகத்தில் நாளை முதல் மழை படிப்படியாக குறையும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் மாறியுள்ளது.