எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் – அமலாபால்
எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது முன்வந்து வெளியில் சொன்னேன் என்று நடிகை அமலாபால் கூறியுள்ளார்.
தற்போது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. இவர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து #METOO வை பயன்படுத்தி பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அனேகன் படத்தில் நடித்த நடிகை அமைரா தஸ்தூர், ஆங்கிலே ஊடகம் ஒன்றிற்கு பேட்டியில் தென்னிந்திய திரையுலகில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியிருப்பதாக கூறியுள்ளார். என்னிடம் தவறாக நடந்தவர்கள் யார் என்று இப்போது கூற மாட்டேன், அவர்கள் இந்த துறையில் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். அவர்கள் எனக்கு என்ன செய்தார்கள் என்பதை ஒருநாள் நிச்சயம் சொல்வேன் என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில் நடிகை அமலாபால் Metoo குறித்து கூறுகையில்,
சமூக வலைதளங்கள் மூலம் நிகழும் Metoo மிக முக்கியமானது. எனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது அதனை நான் முன்வந்து வெளியில் சொன்னேன், அதைப்போல் எல்லாப் பெண்களும் சொல்ல முன் வர வேண்டும் எனக்கூறியுள்ளார்.
பிரபலங்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வலைதளங்களில் பதிவு செய்து வரும் நிலையில் அமலாபால் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.