கேரளாவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட போராட்டம்
கேரளாவில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு வந்ததில் இருந்தே கேரளாவில் பிரச்சினையாகத்தான் இருக்கிறது.
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் போராட்டங்கள் வலுத்து இருக்கிறது. இதற்கு எதிராக வலதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராடி வருகிறார்கள்.
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை பல்வேறு இந்துத்துவா அமைப்புகள்தான் சேர்ந்து நடத்துகிறது. ஆனால் இதை பாஜகதான் ஒருங்கிணைக்கிறது. இந்த போராட்டத்திற்கு கேரளாவில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இன்று 15 ஆயிரம் பேரை பாஜக கூட்டி இருக்கிறது. பல்வேறு இந்துத்துவா அமைப்புக்களை சேர்ந்த எல்லோரும் பாஜக கொடியுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதில் 60 சதவிகிதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை செயலகம் நோக்கி இந்த பேரணி நடைபெற்றது.
வரிசையாக கேரள வெள்ளம், மாட்டுக்கறி என்று எல்லாவற்றிலும் கேரளாவில் கெட்ட பெயரை எடுத்த பாஜக முதல்முறை இந்த சபரிமலை விஷயத்தில் ஸ்கோர் செய்துள்ளது. அதுவும் பெண்கள் அதிக அளவில் பாஜகவிற்கு ஆதரவு அளிக்க தொடங்கி உள்ளனர்.