முத்தலாக்கிற்கு இந்தியாவில் இடமில்லை என்பதை மோடி உறுதிசெய்துள்ளார் – அமித்ஷா
சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேச மாநிலம் சாட்னாவில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் முஸ்லீம் பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் அமித்ஷா பேசுகையில், “முஸ்லீம் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மரியாதை மீது காங்கிரசுக்கு ஒருபோதும் அக்கறை கிடையாது. முத்தலாக் போன்ற விவகாரங்களை எதிர்க்கொள்ள காங்கிரசுக்கு தைரியம் கிடையாது. காங்கிரஸ் கட்சி எதிர்ப்பை தெரிவித்தாலும் பிரதமர் மோடி இந்தியாவில் முத்தலாக்கிற்கு இடமில்லை என்பதை உறுதிசெய்துள்ளார்,” என கூறியுள்ளார்.
பெண்களை வார்த்தையால் மட்டும் பா.ஜனதா ஊக்கமளிக்கவில்லை, அவர்களுக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் பல ஆண்டுகளாக இருந்தாலும் பெண்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் பெண்களுக்கு மதிப்பளிப்பதில் பா.ஜனதா சாதனை படைத்துள்ளது. நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு துறை, சுஷ்மா சுவராஜுக்கு வெளியுறவுத்துறை உள்பட 9 பெண்களுக்கு மோடி அரசு அமைச்சரவையில் இடமளித்துள்ளது என்று கூறியுள்ளார் அமித்ஷா.