மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பால் ஆலன் காலமானார். அவருக்கு வயது 65. அமெரிக்காவின் பெரும் தொழிலதிபர், முதலீட்டாளர், அறப்பணியாளர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் என பன்முகங்களை கொண்ட இவர், புற்றுநோய் காரணமாக உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ரோ சாப்ட்’ மென்பொருள் வடிவமைப்பு நிறுவனம் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரெட்மாண்ட் நகரத்தில் தலைமை இடம் உள்ளது கம்ப்யூட்டருக்கு தேவையான பல வகை மென்பொருட்களை தயாரிப்பது, மேம்படுத்துவது, உரிமை மற்றும் ஆதரவு அளிப்பது போன்ற செயற்பாடுகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனை பில்கேட்சும், பவுல் ஜிஆலன் ஆகிய இருவரும் 1975-ம் ஆண்டு நிறுவினர். பவுல் ஜி ஆலன் கடந்த 9 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று .சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஆப்ரிக்க நாடுகளில் எபோலோ நோய் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை பவுல் ஜி வழங்கியுள்ளார். ‘ஐடியா மேன்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ள இவர் பல்வேறு விருதுகளைம் பெற்றுள்ளார்.