219 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழின போராளி தலைவர் வைகோ அவர்கள் கயத்தாரில் புகழஞ்சலி செலுத்தினார்.
அக்டோபர் 16, 1799, வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட 219 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழின போராளி தலைவர் வைகோ அவர்கள் கயத்தாரில் புகழஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட வீர மன்னர் கட்டபொம்மன். ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் மேலாண்மையை ஏற்க மறுத்து அவர்களுக்கு கப்பம் கட்ட மறுத்தார்.1797-ல் முதன் முதலாக ஆங்கிலேயரான ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்து வீரபாண்டிய கட்டபொம்மனிடம் போரிட்டு தோற்றுப்போனார்.
1799-ல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டு பின்னர் கைப்பற்றப்பட்டது.
பாஞ்சாலன்குறிச்சியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் புதுக்கோட்டையில் பதுங்கினார். எனினும் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் கட்ட பொம்மன் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டார். 1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16, ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாற்றில் ஒரு மைதானத்திலிருந்த பெரிய புளிய மரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிட தினமான இன்று 219 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழினப் போராளி வைகோ அவர்கள் கயத்தார் சென்று புகழஞ்சலி செலுத்தினார் .
முன்னதாக இன்று விடியற்காலை சென்னையில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் மூத்த மகனும் மாலை முரசு நிறுவனருமான மறைந்த இராமச்சந்திர ஆதித்தனாரின் நினைவு நாளை முன்னிட்டு விடியற்காலை 5.30 மணி அளவில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் இராமச்சந்திர ஆதித்தனாரின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது