3 நாள் அரசு முறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங் டெல்லிக்கு வருகை
இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா கூறியதாக ஒரு தகவல் வெளியானது அதில், – “ இந்தியா – இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த சில முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்திய உளவு அமைப்பான ரா என்னை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியாமல் இருக்கலாம்” என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், இலங்கை அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ள கருத்தில், இந்திய உளவு அமைப்பு தன்னை கொல்ல திட்டமிட்டதாக சிறிசேனா கூறவில்லை. ரா உளவாளி கைது செய்யப்பட்டதாக கூறி இரு நாடுகள் இடையே பிரச்சினை ஏற்படுத்த முயற்சி நடப்பதாக மட்டுமே கூறினார்”
அதனை தொடர்ந்து, இந்தியா-இலங்கை இடையே விரிசல், மோதலை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல் வெளியிட்டுள்ளதாக இலங்கை மந்திரி மஹிந்த சமரசிங்கே கூறினார்.
இந்தநிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் அரசு முறை பயணமாக டெல்லிக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கை அதிபரை கொல்ல ‘RAW’ சதி என்ற சர்ச்சை எழுந்த நிலையில் அரசு முறை பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டெல்லிக்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தகக்து.
ரணில் விக்ரமசிங்கே இந்தியா பயணம் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது.