திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஓண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்த பட்டு நெசவு உற்பத்தியாளர் மார்க்கபந்து.
இவர், 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு 2 காங்கேயம் காளைகளை வாங்கியுள்ளார்.
அந்த காளை மாடுகளை பூட்டி ஓட்டுவதற்காக முழுமையான தேக்குமரத்தால் ஆன மாட்டு வண்டியை தயார் செய்துள்ளார்.
மாட்டு வண்டியை செய்ய, 8 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும் அடுத்த தலைமுறையினருக்கு தமிழரின் பாரம்பரியத்தை கொண்டு செல்லவே இதனை செய்ததாகவும் மார்கபந்து கூறியுள்ளார்.
தற்போது அவர் வெளியே செல்வதற்கு காங்கேயம் காளைகள் பூட்டிய மாட்டு வண்டியையே பயன்படுத்தி வருகிறார்.
ஒரு காரின் விலையை விட அதிகமாக 12 லட்சம் ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாட்டு வண்டியை சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.