சிபிஐ வழக்குப்பதிவு செய்ததற்கு எதிராக சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஐகோர்ட்டு சென்றார்
இறைச்சி வியாபாரி மொயின் குரேஷி மீதான வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. மொயின் குரேஷியிடம் இருந்து தரகர் வழியாக ராகேஷ் அஸ்தானா ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என புகார் எழுந்தது. இதில் திடீர் திருப்பமாக, சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. சி.பி.ஐ.யில் இரண்டாவது இடத்தில் உள்ள அவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது, இதுவரை இல்லாத நடவடிக்கையாக கருதப்படுகிறது. சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இடையிலான பனிப்போர் தொடரும் நிலையில் பிரதமர் மோடியும் சம்மன் விடுத்துள்ளார்.
இந்நிலையில் லஞ்ச புகாரில் சிபிஐ வழக்குப்பதிவு செய்ததற்கு எதிராக சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஐகோர்ட்டை நாடியுள்ளார். எனக்கு எதிராக எந்தஒரு நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என உத்தரவிடக் கேட்டுக்கொண்டுள்ளார்.