சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 3 நாட்களுக்கு மேல் தேக்கி வைக்காமல் விநியோகிக்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி அறிவுரை வழங்கினார்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை 3 நாட்களுக்கு மேல் தேக்கி வைக்காமல் விநியோகிக்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி அறிவுரை வழங்கினார். பொதுமக்களுக்கான தண்ணீரின் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய அவர், சாதாரண காய்ச்சல் என்று நோயாளிகள் வந்தாலும் டெங்கு உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் டெங்குவால் உயிரிழப்பு ஏற்படாத வண்ணம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். முன்னதாக சிந்தாதிரிபேட்டை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர் ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.