உத்தர பிரதேசத்தில் 70 வயது பெண்ணை கற்பழித்த தூரத்து உறவினர் மீது எப்.ஐ.ஆர். பதிவு
உத்தர பிரதேசத்தின் ராம்பூர் நகரை சேர்ந்த 70 வயது பெண் ஒருவர் சித்தவுலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தகியா ரான்வாஸ் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அவரை தூரத்து உறவினர் ஒருவர் கடந்த செப்டம்பர் 28ந்தேதி கற்பழித்து உள்ளார். இதனை அடுத்து சொந்த ஊருக்கு திரும்பிய அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி மகனிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து குற்றவாளிக்கு எதிராக போலீசில் நேற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அரியானாவில் பணிபுரியும் குற்றவாளியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.