நாடு – அரசியலமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது ராகுல்காந்தி குற்றச்சாட்டு
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையேயான மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு நள்ளிரவு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதை தொடர்ந்து 13 சிபிஐ அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியதாவது:-
சிபிஐ தலைவர் அலோக் வர்மா ரபேல் மோசடியில் ஆவணங்களை சேகரித்து உள்ளார். அவர் கட்டாயமாக விடுப்புக்கு அனுப்பப்பட்டு உள்ளார். பிரதமரின் செய்தி ரபேல் அருகே வரும் எவரும் நீக்கப்படலாம் அல்லது அழிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகிறது. . நாடு மற்றும் அரசியலமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. என கூறி உள்ளார்.